தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஆயிரம் சந்தேகங்கள்: 271 பென்ஷனரின் மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?

 ஆயிரம் சந்தேகங்கள்: 271 பென்ஷனரின் மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?

 ஆயிரம் சந்தேகங்கள்: 271 பென்ஷனரின் மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?


ADDED : ஜூலை 06, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வைப்புத் தொகையை எந்த வங்கியில் டிபாசிட் செய்தால், வட்டி கூடுதலாக கிடைக்கும்?

ச.கண்ணன், திண்டுக்கல்

பாதுகாப்பு, கூடுதல் வட்டி, நீண்ட காலம் ஆகிய கோணங்களில் இருந்து பார்த்தால், இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. பெண் குழந்தையாக இருந்தால் , அதுவும் 10 வயதுக்குள் இருந்தால், செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வைப்புத்தொகை போடலாம். இதில், 8.20 சதவீத வட்டி கிடைக்கிறது. மகனாக இருந்தால், பி.பி.எப்., எனும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணம் போடலாம். 15 ஆண்டு கால 'லாக்-இன்' காலம் உண்டு; வட்டி 7.10 சதவீதம்.

உங் களுக்கு கொ ஞ்சம் துணிச்சலும், மியூச்சுவல் பண்டுகள் பற்றிய அறிமுகமும் இருந்தால், நல்ல வருவாய் ஈட்டி தரும் பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டு திட் டங்களில் தொடர்ந்து எஸ்.ஐ.பி., போட்டு வாருங்கள். அதுவும் குழந்தைகளின் எதிர்கால படிப்பு, மேற்படிப்பு உள்ளிட்ட செ லவுகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

நான் தமிழக அரசின் பென்ஷனர். கருவூலம் வழங்கும் ஓய்வூதியத்தில் வருமான வரியை கருவூலத் துறையினரே கணக்கிட்டு, டி.டி.எஸ்., பிடித்தம் செய்து விடுகின்றனர். பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ்., தொகை முழுமையாக வருமான வரி துறையின் TRACES-ல் இடம்பெறுவதில்லை; அரைகுறையாக இடம் பெறுகிறது. இதனால், ஆடிட்டர் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கு என்ன செய்வது?

எஸ்.பொன்னுத்துரை, மதுரை

ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். எந்த கருவூலம் வாயிலாக ஓய்வூதியம் பெறுகிறீர்களோ, அங்குள்ள கருவூல அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுப்பது தான், இதற்கான சட்டப்பூர்வமான ஒரே தீர்வு.

உங்கள் பான் கார்டு, ஓய்வூதிய புத்தக நகல் மற்றும் தற்போது TRACES தளத்தில் எவ்வளவு தொகை குறைவாக காட்டுகிறது என்பதற்கான நகல் (Form 26AS / AIS) ஆகியவற்றை இணைத்து ஒரு மனு கொடுங்கள். அதில், 'விடுபட்ட டி.டி.எஸ்., தொகையை சரி செய்து, முழுமையான படிவம் 16 வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வையுங்கள்.

கருவூலத் துறையினர் தங்களின் சிஸ்டத்தில் உள் ள தவறுகளை கண்டுபிடித்து, திருத்தப்பட்ட டி.டி.எஸ்., அறிக்கையை தாக்கல் செய்த சில நாட்களிலேயே, விடுபட்ட தொ கையும் உங்கள் கணக்கில் வந்து சேர்ந்து விடும். அதுவரை காத்திருந்து, TR ACES தள த்தில் முழுத்தொகையும் அப்டேட் ஆன பிறகே வருமான வரி தாக்கலை செய்யுமாறு உங்கள் ஆடிட்டரிடம் சொல்லுங்கள் .

மியூச்சுவல் பண்டுகளில் நேரடியாக நிப்டி 50, நெக்ஸ்ட் 50ல் முதலீடு செய்தால், ஆண்டு வருமானம் தோராயமாக என்ன வரும்?

கி.சவுந்தரராசன், கள்ளக்குறிச்சி

மியூச்சுவல் பண்டு முதலீட்டில்வருமானம் என்பது வங்கி எப்.டி., மாதிரி உறுதியான நிலையான வருமானம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பங்கு சந்தை ஒவ்வொரு ஆண்டும் எப்படி நகர்கிறதோ அதை பொறுத்து தான், பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளும் வருமானம் ஈட்டி தரும்.

நீங்கள் கேட்கும் நிப்டி 50 மற்றும் நிப்டி நெக்ஸ்ட் 50 ஆகிய குறியீடுகளின் கடந்த 15 முதல் 20 ஆண்டுகள் வளர்ச்சியை பார்த்தால், ஒன்று புரிகிறது. நிப்டி 50, சராசரியாக 12 முதல் 14 சதவீத ஆண்டு வருமானம் ஈட்டியிருக்க, நிப்டி நெக்ஸ்ட் 50, 14 முதல் 16 சதவீதம் வரை வளர்ந்திருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன், இது சராசரி வருவாய். ஒரு சில ஆண்டுகளில் வருவாய் கூடுதலாகவும், வேறு சில ஆண்டுகளில் மிக மிக குறைவாகவும் இருக்கலாம். உதாரணமாக, கடந்த 24 மாதங்களில் பங்கு சந்தை நெகடிவ் வருவாயையே கொடுத்திருக்கிறது.

அதனால், நீங்கள் சொல்லும் குறியீடுகளில் முதலீடு செய்துவிட்டு, குறைந்தபட்சம் 5 முதல் 7 ஆண்டுகள் வரை காத்திருக்கும் பொறுமை இருக்குமானால், இதில் இறங்குங்கள்.

நான் ரயில்வே வேலை செய்து ஓய்வு பெற்றேன். எனக்கும், என் மனைவிக்கும் ரேஷன் கார்டு உள்ளது. முந்தைய தி.மு.க., அரசு பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்தது; என் ரேஷன் கார்டில் பெயர் உள்ள என் மனைவிக்கு உரிமைத்தொகை கொடுக்கவில்லை. பென்ஷன் வாங்குவதால் இல்லை என்றனர். எல்லா கார்டுதாரர்களுக்கும் பணம் உண்டு என்றும், வருமான வரி கட்டுபவர்களுக்கு இல்லை என்றும் துணை முதல்வராக இருந்த உதயநிதி கூறினார். நான் வருமான வரி கட்டவில்லை. இப்போது விஜய் அரசு என் மனைவிக்கு 2,500 ரூபாய் உரிமைத்தொகை கொடுக்குமா?

எஸ்.சுகுமாரன், விழுப்புரம்

வாய்ப்பில்லை. முந்தைய அரசாக இருந்தாலும் சரி, தற்போதைய அரசாக இருந்தாலும் சரி, ஒரு நிபந்த னை தொடர்கிறது. அதாவது, குடும்பத்தில் உள்ள ஒருவர் மத்திய அல்லது மாநில அரசில் நிரந்தர பணியாளராக இருக்கக்கூடாது; ஓய்வூதியம் பெறுபவரா கவும் இருக்கக்கூடாது என்பது தான் அது.

நீங்கள் வருமான வரி கட்டவில்லை என்றாலும், ரயில்வே துறையில் பணியாற்றிவிட்டு ஓய்வூதியம் பெறுவதால், இந்த திட்டத்தின் பயனை பெற உங்கள் மனைவி தகுதி பெறமாட்டார்.

(அல்லது)

ஓய்வூதியதாரரின் மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?

என் பெயரில் உள்ள நிலத்தை ஒருவருக்கு கிரயம் அக்ரிமென்ட் போட்டும், நிலத்தின் பெயரில் தனியார் வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். இந்த கடனை நிலம் வாங்குபவர் கட்டிவிடுவார் என்று ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது. ஆனால், அவரிடம் பணம் இல்லை. நீங்கள் வங்கிக்கு பணம் கட்டி, அந்த ரசீதை என்னிடம் கொடுங்கள்; அதற்கு நான் பணம் தருகிறேன் என்று அவர் சொன்னார். பின்னர் என்னிடம் இருந்து ரசீதை பெற்று, நான் தான் பணம் கட்டினேன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நான் தான் பணம் கட்டினேன் என்ற ரசீதை வங்கியில் இருந்து வாங்குவது எப்படி?

பி.காளிராஜ், போடிநாயக்கனுார், தேனி

கடன் உங்கள் பெயரில் இருந்ததால், அதற்கான ஆவணங்களை வங்கியில் கேட்டு பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அந்த 3 லட்சம் ரூபாயை எப்படி திருப்பி கொடுத்தீர்கள் என்பது தான் இங்கு மிக முக்கியம். காசோலையாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ செலுத்தியிருந்தால், உங்களின் வங்கி கணக்கு அறிக்கையே நீங்கள் தான் பணம் கொடுத்தீர்கள் என்பதற்கான ஆதாரம்.

ஒருவேளை நீங்கள் பணத்தை ரொக்கமாக கட்டியிருந்தால், அந்த பணம் கட்டப்பட்ட தேதியை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட கிளை மேலாளரிடம் எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுங்கள். உங்கள் பெயரில் இருந்த கடன் கணக்கில் கட்டப்பட்ட தொகைகளுக்கான ரசீது அல்லது சலான் நகலை நீதிமன்ற தேவைக்காக வழங்கும்படி அதில் கேட்கவும்.

இன்னொரு விஷயம். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, 50,000த்திற்கும் மேற்பட்ட தொகையை ரொக்கமாக வங்கியில் செலுத்தும்போது, பணம் செலுத்துபவரின் பான் கார்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம்; சலானில் கையெழுத்தும் பெறப்படும். அந்த சலானின் நகலை நீங்கள் வங்கியிலிருந்து வாங்கினால், அதில் உங்களின் கையெழுத்தும், பான் எண்ணும் இருக்குமே. நீங்கள் தான் அந்த பணத்தை கட்டினீர்கள் என்பதற்கு இதுவே மறுக்க முடியாத சாட்சி.

ஒருவேளை இவையெல்லாம் பழைய ஆவணம்; தேட முடியாது என்று கூறி வங்கி சலான் நகலை தர மறுத்தாலோ, தாமதப்படுத்தினாலோ, உங்கள் வழக்கறிஞர் வாயிலாக நீதிமன்றத்தில் ஒரு மனு (Subpoena) தாக்கல் செய்யுங்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனை பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக்கோரி, நீதிபதி வாயிலாகவே வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்க செய்ய முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us