மக்காச்சோளத்துக்கு மாறிய விவசாயிகள் மிளகாய் சாகுபடி சரிவு
மக்காச்சோளத்துக்கு மாறிய விவசாயிகள் மிளகாய் சாகுபடி சரிவு
ADDED : ஆக 03, 2025 02:35 AM

உரிய விலை கிடைக்காதது, அதிக இருப்பு ஆகியவற்றால், காரீப் பருவத்தில், மிளகாய்
சாகுபடி பரப்பை விவசாயிகள் குறைத்து உள்ளனர். அத்துடன் மக்காச்சோளத்துக்கு மாறியுள்ளனர்.
* கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மிளகாய் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
* இதுவரை 20 சதவீதம் குறைவான பரப்பிலேயே மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.
* நீர் இருப்பு போதுமானதாக இருப்பதால், சாகுபடி பரப்பு அதிகரிக்குமா என்பது, செப்டம்பர் இறுதியில்தான் தெரியும்.
கடந்த ஆண்டின் மிளகாய் விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, சாகுபடி அதிகரிப்பால் மிளகாய் இருப்பும் அதிகமாக உள்ளது. வழக்கமாக இதுபோன்ற சூழலில், பருத்தி சாகுபடிக்கு விவசாயிகள் மாறுவர். ஆனால், இந்த முறை மாற்றுப் பயிராக, பெரும்பாலானோர் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
- சாம்பசிவ ராவ் வேலகாபுடி, தலைவர்,
மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கம், குண்டூர்.

