தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சிறுதொழில்களுக்கு சலுகைகள் 5 ஆண்டுகள் வழங்க வலியுறுத்தல்; ஏ.ஐ., தொழில்நுட்பம், 'தொழில்கள் 4.0' தேவை

 சிறுதொழில்களுக்கு சலுகைகள் 5 ஆண்டுகள் வழங்க வலியுறுத்தல்; ஏ.ஐ., தொழில்நுட்பம், 'தொழில்கள் 4.0' தேவை

 சிறுதொழில்களுக்கு சலுகைகள் 5 ஆண்டுகள் வழங்க வலியுறுத்தல்; ஏ.ஐ., தொழில்நுட்பம், 'தொழில்கள் 4.0' தேவை

1


ADDED : ஜூலை 04, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 07:12 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி இலக்கு, பசுமை ஆற்றல், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம், தொழில்கள் 4.0 ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு சலுகைகள் தேவை என்கின்றனர் தொழிற்துறையினர்.

தமிழகத்தின் தற்போதைய தொழில்களின் நிலை குறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை (எம்.எஸ்.எம்.இ.,) பல்வேறு சுமைகளில் இருந்து தமிழக அரசு கைதுாக்கி விட வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதன மானியத்தை 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை உயர்த்த வேண்டும்.

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, புதிய இயந்திரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' ரிமோட் பயன்பாடு, சி.என்.சி., ஆட்டோமேஷன், ஸ்மார்ட் பேக்டரி போன்ற முதலீடுகளுக்கு 'தொழில்கள் 4.0' திட்டத்தின் கீழ் 40 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன் வரம்பு 5 கோடி ரூபாய் என்பதை 10 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும் பெண் தொழில்முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 10% மானியம், குறைந்த வட்டி, விரைவான அனுமதி தேவை கிளவுட் சாப்ட்வேர், சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டல் உற்பத்தி போன்றவற்றை உற்பத்தி சாதனமாக ஏற்று மானியம் தேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us