தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ தமிழக விவசாயிகளிடம் இருந்து தோத்தாபுரி மாம்பழம் கொள்முதல்; மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல்

 தமிழக விவசாயிகளிடம் இருந்து தோத்தாபுரி மாம்பழம் கொள்முதல்; மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல்

 தமிழக விவசாயிகளிடம் இருந்து தோத்தாபுரி மாம்பழம் கொள்முதல்; மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல்


ADDED : ஜூலை 09, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தமிழகத்தில் இருந்து கொப்பரை தேங்காய் மற்றும் தோத்தாபுரி மாம்பழங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதன் வாயிலாக, பெங்களூரா எனப்படும் தோத்தாபுரி மாம்பழம் கிலோ 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். கிலோ 5 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்த நிலையில், மா விவசாயிகளுக்கு இது பெரும் ஆறுதல் அளிக்கும்.

இதுகுறித்து வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை:

தமிழகத்தில் கொப்பரை மற்றும் தோத்தாபுரி மாம்பழ விலை வீழ்ச்சி கண்டு, விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.

நடப்பாண்டின் சந்தை நிலைப்படுத்தல் திட்டத்தின்கீழ் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவை முற்றிலும் தமிழகத்தில் இருந்து ஒரு குவின்டால் 1,545.41 ரூபாய் விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us