கப்பல் கம்பெனிகளுக்கு பொருட்களை விற்க தமிழக அரசு உதவி
கப்பல் கம்பெனிகளுக்கு பொருட்களை விற்க தமிழக அரசு உதவி
ADDED : ஜன 11, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பொருட்களை, சிறுதொழில் நிறுவனங்கள் விற்பதற்கு உதவுவதற்காக, தமிழக அரசின், 'பேம் டி.என்' நிறுவனம், கோவை மாவட்டம், கொடிசியா அரங்கில் வரும், 31ம் தேதி, வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதில், 'கொச்சின் ஷிப்யார்டு, கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்டு இன்ஜினியரிங், எல் அண்டு டி ஷிப்பில்டிக், மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்' உள்ளிட்ட முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் சிறு நிறுவனங்கள், 'பேம் டி.என்' தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

