உங்களிடம் உள்ள நகைகளின் உண்மையான மதிப்பு தெரியுமா?
உங்களிடம் உள்ள நகைகளின் உண்மையான மதிப்பு தெரியுமா?
ADDED : டிச 09, 2025 04:21 AM

நம் நாட்டில் இல்லத்தரசிகள் தங்களிடம் வைத்திருக்கும் தங்க நகைகளின் மதிப்பை அதிகமாகவே மதிப்பீடு செய்திருக்கலாம்; ஆனால், தங்கம் விலை உயர்ந்தாலும், நகைகளை முதலீடாக வைத்திருப்பவர்களுக்கு உண்மையான வருமானம் குறைவாகவே கிடைத்திருப்பதாக, 'கோட்டக் ஈக்விட்டிஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதில், குறிப்பிட்டுள்ள தாவது:
ஒரு நகை வாங்கும் விலையில், 60-70 சதவீதம் மட்டுமே தங்கத்தின் உண்மையான மதிப்பாக இருக்கிறது. மீதமுள்ளவை நகைகளை உருவாக்குவதற்கான செலவு, கற்களின் விலையாகவும் உள்ளது.
கடந்த 2011ம் நிதியாண்டு முதல், நம் நாட்டில் இல்லத்தரசிகள் வாங்கிய தங்க நகைகளுக்கான உண்மையான சராசரி வருமானம் 10.30 சதவீதமாக உள்ளது. ஆனால், இதே காலத்தில் தங்கத்தின் விலையேற்றம் 12.50 சதவீதமாக இருக்கிறது.
நாட்டின் மொத்த தங்க நகை இருப்பில் 70 சதவீதம், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களிடமே உள்ளது. இதனால், குறைந்த வருமானம் கொண்டவர்களே, தங்கத்திற்கு அதிக விலை செலுத்தும் ரிஸ்க்கில் உள்ளனர்.
எனவே, முதலீட்டு அடிப்படையில் நகைகளை வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல; மாறாக, தங்க இ.டி.எப்.,கள், நாணயங்கள் அல்லது கட்டிகள் உள்ளிட்ட நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

