தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/‘வாட்ஸாப்’பில் பி.எப்., சேவை இ.பி.எப்.ஓ., புதிய அறிவிப்பு: இ.பி.எப்.ஓ., அமைப்பின் 2 புதிய அறிவிப்புகள்

‘வாட்ஸாப்’பில் பி.எப்., சேவை இ.பி.எப்.ஓ., புதிய அறிவிப்பு: இ.பி.எப்.ஓ., அமைப்பின் 2 புதிய அறிவிப்புகள்

‘வாட்ஸாப்’பில் பி.எப்., சேவை இ.பி.எப்.ஓ., புதிய அறிவிப்பு: இ.பி.எப்.ஓ., அமைப்பின் 2 புதிய அறிவிப்புகள்


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ.பி.எப்.ஓ., அமைப்பு தனது சந்தாதாரர்களுக்கு சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், இரண்டு புதிய முக்கிய வசதிகளை அறிவித்துள்ளது.

ஊழியர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, இ.பி.எப்.ஓ., அமைப்பின் சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாட்ஸாப் எண் 8796441800 என்கிற நம்பருக்கு ‘ஹாய்’ என்கிற குறுஞ்செய்தியை அனுப்புவதன் வாயிலாக, தங்களது பி.எப்., இருப்பு தொகை, கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்புக் விபரங்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ தொடர்பான சந்தேகங்களுக்கும் இந்த வாட்ஸாப் தளம் வாயிலாக வழிகாட்டல் வழங்கப்படும். சாதாரண கணக்கு விபரங்களை அறிய இ.பி.எப்.ஓ., அலுவலகங்களுக்கு செல்வதையோ அல்லது இணையதளத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதையோ இது தவிர்க்கும்.

நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய பி.எப்., கணக்குகளில் 1,000 வரை நிலுவை இருந்தால், அதற்கு தனியாக ‘கிளைம்’ செய்ய தேவையில்லை. ஆதார் வாயிலாக சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மற்றும் வங்கியின் கே.ஒய்.சி., விபரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அந்த நிலுவை தொகை நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் பழைய கணக்குகளில் உள்ள 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை உரிய ஊழியர்களுக்கு நேரடியாக சென்று சேரும் என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us