ஐ.பி.ஓ., வெளியீட்டில் இந்தியா முதலிடம் செபி அறிக்கையில் தகவல்
ஐ.பி.ஓ., வெளியீட்டில் இந்தியா முதலிடம் செபி அறிக்கையில் தகவல்
UPDATED : டிச 10, 2025 01:37 AM
ADDED : டிச 10, 2025 01:36 AM

சர்வதேச அளவிலான பதற்றங்கள், வர்த்தகத்தில் நிலவும் நிச்சயமற்றதன்மை மற்றும் பல்வேறு நாடுகளின் சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இருந்தபோதிலும், புதிய பங்கு வெளியீட்டில் நம் நாடு உலகளவில் முதலிடத்தை பிடித்திருப்பதாக செபியின் அறிக்கை கூறுகிறது.
செபியின் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
![]() |
கடந்த அக்டோபர் மாதத்தில், உலகளவில் அதிக நிதி திரட்டிய முதல் ஐந்து ஐ.பி.ஓ.,க்களில், இரண்டு நம் நாட்டிலிருந்து வெளியானவை.
குறிப்பாக, 'டாடா கேபிடல்' மற்றும் 'எல்.ஜி.எலெக்ட்ரானிக்ஸ்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வாயிலாக 41,783 கோடி ரூபாய் நிதி திரட்டி சாதனை படைத்துள்ளன. இது, கடந்த 2021ல் பதிவான முந்தைய அதிகபட்ச அளவான 36,305 கோடி ரூபாயை விஞ்சியுள்ளது.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் வலுவான பங்களிப்பு மற்றும் சந்தை மீதான நம்பிக்கை ஆகியவையே நம் நாடு புதிய பங்கு வெளியீட்டில் முதலிடத்தில் இருக்க காரணம் என செபியின் அறிக்கை தெரிவித்துள்ளது.


