இன்று பட்டியலாகும் டாடா கமர்ஷியல் வெஹிக்கிள் பங்கு
இன்று பட்டியலாகும் டாடா கமர்ஷியல் வெஹிக்கிள் பங்கு
ADDED : நவ 11, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், வர்த்தக வாகன பிரிவிற்கான 'டி.எம்.எல்., கமர்ஷியல் வெஹிக்கிள்' நிறுவனம் இன்று பங்குச்சந்தையில்
பட்டியலிடப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வர்த்தக வாகனங்களுக்கான வணிகம் மற்றும் அது தொடர்பான முதலீடுகள் அனைத்தும் இந்நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு
உள்ளன.
'டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்' என்ற மற்றொரு நிறுவனம், ஏற்கனவே கடந்த அக்., 14ல் தனி நிறுவனமாக பட்டியலிடப்பட்டு பங்கு வர்த்தகத்தை துவங்கி விட்டது.
இந்நிறுவனத்தின் கீழ், பயணியர் வாகனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகியவற்றின் வணிகங்கள் இடம்பெற்றுள்ளன.

