நிப்டி வங்கி குறியீட்டில் யெஸ் பேங்க், யூனியன் வங்கி
நிப்டி வங்கி குறியீட்டில் யெஸ் பேங்க், யூனியன் வங்கி
ADDED : டிச 03, 2025 12:43 AM

'நி ப்டி வங்கி' குறியீட்டின் கட்டமைப்பில், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத மிக முக்கியமான மாற்றங்களை, தேசிய பங்குச் சந்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த குறியீட்டில், யெஸ் பேங்க், யூனியன் வங்கி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இது, டிசம்பர் 31ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நிப்டி பேங்க் இண்டெக்ஸில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கையை, 12லிருந்து 14ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலீட்டை பல்வகைப்படுத்தவும், ஒரு சில வங்கிகள் அதிக ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும் இந்த புதிய வரம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நிப்டி பேங்க் இண்டெக்ஸில், வெயிட்டேஜின் அடிப்படையில், முதல் பெரிய வங்கிக்கு 19 சதவீதமும், அடுத்து உள்ள 2 வங்கிகளுக்கு தலா 14 மற்றும் 10 சதவீதமும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்றைய பங்கு வர்த்தகத்தில், இவ்விரு வங்கி பங்குகளும் ஏற்றத்துடன் காணப்பட்டன.

