/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உர இறக்குமதி வரி ரத்து; ரஷ்ய நிறுவனம் கோரிக்கை
/
உர இறக்குமதி வரி ரத்து; ரஷ்ய நிறுவனம் கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2024 12:19 AM

மாஸ்கோ: உர இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை இந்தியா கைவிட வேண்டும் என, ரஷ்யாவின் முன்னனி உர தயாரிப்பு நிறுவனமான 'போசாக்ரோ' வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவின் முன்னணி உர தயாரிப்பாளரான போசாக்ரோ நிறுவனம், எதிர்காலத்தில் நிலையான வினியோகத்தை உறுதி செய்ய, உர இறக்குமதிக்காக இந்தியா விதிக்கும் 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உர வினியோகத்தை மேலும் அதிகரிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும்; இருப்பினும், தற்போதுள்ள வர்த்தக தடைகளால், தங்கள் திறன் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கான தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளதாகவும், இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது-.
சமீபத்தில், பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, உர இறக்குமதி குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, நிறுவனங்களுக்கு இடையேயான நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், உர வினியோக துறையில் ஒத்துழைப்பை வழங்க, இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டன. இதைத் தொடர்ந்தே, இறக்குமதி வரி ரத்து குறித்த வேண்டுகோளை, உர தயாரிப்பு நிறுவனம் முன்வைத்துள்ளது.

