/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கடன் வட்டியை குறைத்த இந்தியன் வங்கி, பி.ஓ.பி.,
/
கடன் வட்டியை குறைத்த இந்தியன் வங்கி, பி.ஓ.பி.,
ADDED : டிச 07, 2025 01:47 AM

மும்பை : ரிசர்வ் வங்கி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை குறைத்ததை தொடர்ந்து, அதன் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு சென்று சேரும் வகையில், வங்கிகள் ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டியை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தில், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, தன் ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டியை 8.20 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. நேற்று முதல் வட்டி குறைப்பு அமலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இதேபோன்று, பேங்க் ஆப் இந்தியா, ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டியை, 8.35 சதவீதத்தில் இருந்து, 8.10 சதவீதமாக குறைத்துள்ளது. பேங்க் ஆப் பரோடா, ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டியை 8.15 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளன.
வங்கி வட்டி விகிதம் முன்பு (%) இப்போது (%)
இந்தியன் வங்கி 8.20 7.95
பேங்க் ஆப் இந்தியா 8.35 8.10
பேங்க் ஆப் பரோடா 8.15 7.90

