/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தெலுங்கானாவுக்கு கிடைத்த ரூ.2.43 லட்சம் கோடி முதலீடு
/
தெலுங்கானாவுக்கு கிடைத்த ரூ.2.43 லட்சம் கோடி முதலீடு
தெலுங்கானாவுக்கு கிடைத்த ரூ.2.43 லட்சம் கோடி முதலீடு
தெலுங்கானாவுக்கு கிடைத்த ரூ.2.43 லட்சம் கோடி முதலீடு
ADDED : டிச 10, 2025 01:14 AM

ஹைதராபாத்: தெலுங்கானா அரசு நடத்தும் சர்வதேச தொழில் மாநாட்டில், அம்மாநிலத்துக்கு ரூ.2.43 லட்சம் கோடி முதலீடு கிடைப்பதற்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன.
உலகெங்குமிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்காக, 'தெலுங்கானா ரெய்சிங் குளோபல் சம்மிட்' என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளிலேயே, ஏராளமான முதலீட்டுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநாட்டின் முதல் நாளிலேயே, 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவற்றுள் டீப் டெக், கிரீன் எனர்ஜி, ஏரோஸ்பேஸ், ஜவுளி ஆகிய துறைகளும் அடக்கம் என மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் நிகழ்வின்போது, டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குழுமம், 41,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஸ்மார்ட் டெக்னாலஜி மையம் தெலுங்கானாவில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், நடிகர் சல்மான் கானின் வென்ச்சர்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், தெலுங்கானாவில் சர்வதேச தரத்தில் பொழுதுபோக்கு மையங்கள் அடங்கிய ஒரு சிறப்பு நகரியத்தை உருவாக்க இருக்கிறது. அங்கு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டூடியோ அமைக்கப்படும். இதற்காக அந்நிறுவனம் 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

