ADDED : நவ 01, 2025 11:28 PM

இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த அக்டோபர் மாதத்தில், கிட்டத்தட்ட 14,520 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். தொடர்ந்து மூன்று மாதங்களாக, முதலீடுகள் வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் முதலீட்டை மேற்கொண்டிருப்பது தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
அதிகரிக்க காரணங்கள்
இந்திய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு குறைந்தது
நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை சாதகமாக இருந்தது
ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்டது
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்ற கணிப்புகள்
கச்சா எண்ணெய் விலை குறைந்தால், நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்ற கணிப்பு
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் சாதகமாக முடியும் என்ற எதிர்பார்ப்பு
எச்சரிக்கை அம்சங்கள்
வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபரின் நிலையற்ற நிலைப்பாடு
அமெரிக்கா -- சீனா பிரச்னை சீரானால், சீன பங்குச் சந்தையில் முதலீடு அதிகரிக்கும்
மற்ற பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் அன்னிய முதலீடுகள் குறைவு.

