ADDED : ஏப் 26, 2024 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேபரேலி:உத்தர பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
உ.பி., மாநிலம் அமேதி அருகே பதர்கஞ்சில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 8 பேர், நேற்று முன் தினம் நள்ளிரவு, ஸ்கார்பியோ காரில் ரேபரேலிக்கு புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மாலின் பூர்வா கிராமம் அருகே வரும்போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த ராட்சத குழாயில் மோதியது.
அதைத் தொடர்ந்து மரத்தில் மோதி கார் நசுங்கியது.
காரில் இருந்த பங்கஜ் பால்,30, ராகவேந்திர யாதவ்,50, தீபக் பால்,28, அவதேஷ் பால்,45 ஆகிய 4 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

