ADDED : பிப் 25, 2025 11:56 PM
பெங்களூரு; பெங்களூரின், பிரபலமான பிரஸ்டீஜ் குரூப் நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரின், எம்.ஜி., சாலையில் பிரஸ்டீஜ் குரூப் நிறுவனம் உள்ளது. அபார்ட்மென்ட் கட்டுவது உட்பட பல்வேறு தொழில்களில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மிகவும் பிரபலமான இந்நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பெங்களூரின் பல்வேறு இடங்களில், அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில், நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர்.
திடீரென நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகளை கண்டு, ஊழியர்கள் வெலவெலத்தனர். நகரின் நான்கு முக்கிய அலுவலகங்களில், ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பிரஜ்டீஜ் குரூப் நிறுவனம், வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி, ஆய்வு செய்கின்றனர்.

