கலபுரகி வந்தே பாரத் ரயிலுக்கு யாத்கிர் நிலையத்தில் நிறுத்தம்
கலபுரகி வந்தே பாரத் ரயிலுக்கு யாத்கிர் நிலையத்தில் நிறுத்தம்
ADDED : ஜூலை 27, 2024 05:03 AM
யாத்கிர் : 'பெங்களூரு -- கலபுரகி வந்தே பாரத் ரயில், யாத்கிர் ரயில் நிலையத்தில் இனி ஒரு நிமிடம் நின்று செல்லும்' என்று, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரில் இருந்து கலபுரகிக்கு தினமும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் மதியம் 2:40 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11:30 மணிக்கு கலபுரகி ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
எலஹங்கா, அனந்தபூர், குண்டக்கல், மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்த ரயிலுக்கு யாத்கிர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வேண்டும் என்று, பயணியரிடமிருந்து தென்மேற்கு ரயில்வேக்கு கோரிக்கை வந்தது.
இதை ஏற்றுக் கொண்ட தென்மேற்கு ரயில்வே, யாத்கிரில் ஒரு நிமிடம் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் யாத்கிரில் ஒரு நிமிடம் ரயில் நின்று செல்லும்.

