sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் மஹா சிவராத்திரி

/

ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் மஹா சிவராத்திரி

ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் மஹா சிவராத்திரி

ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் மஹா சிவராத்திரி


ADDED : பிப் 25, 2025 08:03 PM

Google News

ADDED : பிப் 25, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறும். நொய்டா, செக்டார் 62, ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலிலும் சிவ ராத்திரி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் 2022 ஆகஸ்ட் 21ல் நடைபெற்றது. இங்கு மூலவராக வீற்றிருந்து ஸ்ரீ கார்த்திகேயா பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ விநாயகா, ஸ்ரீ நவகிரகங்கள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆகிய விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஒரே கல்லில் வடிவமைத்துள்ள முருகனின் சிலை, 4.5 அடி உயரத்துடன் அம்சமாக வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார். இந்த மாதிரியான வடிவம், உத்தர பிரதேசத்தில், இக்கோவிலில் தான் உள்ளது!

ஸ்ரீ வரசித்தி விநாயகர், 'மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெரிது'! தெய்வீக சக்தி உள்ள இந்த பிள்ளையாரை காண, நொய்டா மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், 37 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரியான மூர்த்தி, வட இந்தியாவில், இக்கோவிலில் தான் காணலாம்!

ஒத்த எண்ணம் கொண்ட தென்னிந்திய மக்களால் தொடங்கப்பட்ட இந்த வேதிக் பிரசார் சன்ஸ்தான், பல்வேறு ஆன்மீக, சமய மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இந்த இரண்டு கோவில்களிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இக்கோவிலில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. செக்டார் 22ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இன்று ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலிலும் மஹா சிவ ராத்திரி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலை முதல் நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு கால பூஜையிலும் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், ஸ்ரீஸுக்தம், துர்கா ஸூக்தம் சொல்லி பல வாசனை திரவியங்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அபிஷேகத்துக்குப் பின், ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் மற்றும் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

கோவிலுக்கு வழி:


டில்லி விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ., துாரம், 35 நிமிடம் பயணம்புதுடில்லி ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., துாரம், 25 நிமிடம் பயணம்டில்லி மெட்ரோ: ப்ளூ லைனில் துவாரகா - நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி, செக்டார் 62இல் இறங்கி, கேட் 1ல் இருந்து வெளியேற கோவிலை அடையலாம்.








      Dinamalar
      Follow us