ADDED : ஏப் 27, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கமகளூரு: நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என, அவரது ரசிகர் ஒருவர், சிருங்கேரி சாரதா தேவிக்கு, சிறப்பு பூஜை செய்தார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என, பா.ஜ., தொண்டர்களும், மோடியின் ரசிகர்களும் விரும்புகின்றனர்.
மோடி மீண்டும் பிரதமர் ஆக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், பூஜை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டி, அவரது ரசிகர் ஒருவர், சிக்கமகளூரு சிருங்கேரியில் உள்ள, சாரதா தேவி கோவிலில் நேற்று சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தார்.
சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். சஹஸ்ரநாம அர்ச்சனைக்காக, பிரதமர் மோடியின் பெயரில், கட்டண டிக்கெட் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

