விடுமுறை அளித்த ராஜ்குமார் நினைவுகூர்ந்த ராகவேந்திரா
விடுமுறை அளித்த ராஜ்குமார் நினைவுகூர்ந்த ராகவேந்திரா
ADDED : ஏப் 27, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் அனைவரும், ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டனர். ராகவேந்திரா ராஜ்குமார், அஸ்வினி புனித் ராஜ்குமார் என, அவரது குடும்பத்தினர், பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சதாசிவ நகரில் ஓட்டு போட்டனர்.
ராகவேந்திரா கூறியதாவது:
என் தந்தை ராஜ்குமார், ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டு போடுவார். மற்றவரையும் ஓட்டு போடும்படி ஊக்கப்படுத்துவார். ஓட்டுப்பதிவுக்கு பெருமளவில் மதிப்பு கொடுத்தார்.
நாட்டுக்காக அரைமணி நேரம் ஒதுக்குங்கள். ஓட்டு போடுவது உங்கள் கடமை. வரிசையில் நின்று ஓட்டு போடுங்கள் என, அறிவுறுத்துவார். அது மட்டுமின்றி, ஓட்டுப்பதிவு நாளன்று எங்கள் வீட்டு பணியாட்களுக்கு விடுமுறை கொடுத்து, ஓட்டு போட அனுப்புவார்.
இவ்வாறு அவர்கூறினார்.

