மேற்கு வங்கத்தில் பயங்கரவாதிகள் தஞ்சம்: அனுராக் தாக்கூர் விளாசல்
மேற்கு வங்கத்தில் பயங்கரவாதிகள் தஞ்சம்: அனுராக் தாக்கூர் விளாசல்
ADDED : ஏப் 27, 2024 05:24 PM

சிம்லா: 'மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்' என நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
ஹிமாச்சல பிரதேசம் ஹமிர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்கூர் பேசியதாவது: உங்கள் குழந்தைகளின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு கொடுக்கவும், நாடுகளின் அணு ஆயுதங்களை அழிக்க போவதாகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. நீங்கள் காங்கிரஸ் அரசு வேண்டுமா? அல்லது நம்பிக்கையுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பயங்கரவாதிகள் தஞ்சம்
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் வெடிகுண்டு வெடிப்பது சாதாரணமாகிவிட்டன. மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்என்ன மாதிரியான அரசு இது?. மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

