உ.பி., தொழிலதிபரை கடத்தி ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்
உ.பி., தொழிலதிபரை கடத்தி ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்
ADDED : ஜூலை 26, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோண்டா:தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் பசஹியா கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் குமார், 35. அதே பகுதியில் கர்னல்கஞ்ச் சந்தையில் பூ வியாபாரம் செய்கிறார்.
கடந்த 24ம் தேதி, சந்தைக்கு சென்ற அர்ஜுன் வீடு திரும்பவில்லை. அவரது சகோதரர் ராகேஷ், போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று ராகேஷை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒருவர், அர்ஜுனை கடத்தி வைத்திருப்பதாகவும், 60 லட்சம் ரூபாய் தயார் செய்துவிட்டு அழைக்குமாறும் கூறினார்.
போலீசுக்கு ராகேஷ் தகவல் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் அழைத்த மொபைல் போன் எண்ணை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், கடத்தல் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

