ரக்பி தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை: நடிகர் ராகுல் போஸ் அறிவிப்பு
ரக்பி தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை: நடிகர் ராகுல் போஸ் அறிவிப்பு
ADDED : டிச 09, 2025 10:26 PM

புதுடில்லி: பாலிவுட் நடிகரும், ரக்பி இந்தியா தலைவருமான ராகுல் போஸ், ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.
ராகுல் போஸ், 11 ஆண்டுகள் தேசிய ரக்பி வீரராக இருந்தவர். டிசம்பர் 2021 இல் இந்திய ரக்பி கால்பந்து யூனியன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஷிம்லாவில் உள்ள ஜுப்பல் அரச குடும்பத்தைச் சேர்ந்த திவ்யா குமாரி என்பவர், கோல்கட்டாவில் பிறந்த ராகுல் போஸ், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தேசிய ரக்பி சம்மேளனத் தேர்தலில் இரண்டு முக்கியமான ஓட்டுக்களை பெறுவதற்காக சட்டவிரோதமாக ஹிமாச்சலப் பிரதேச வசிப்பிடச் சான்றிதழைப் பெற்றார் என்றும் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 18, அன்று நடைபெற உள்ளது.தற்போதைய சர்ச்சை இந்தியாவில் உள்ள விளையாட்டு சங்கங்களின் நிர்வாகம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் ராகுல் போஸ் போட்டியிடவில்லை என்று முடிவு எடுத்துள்ளார்.
ராகுல் போஸ் வெளியிட்ட அறிக்கை:
ஹிமாச்சலப் பிரதேச தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்றும், இந்தச் சூழ்நிலை குறித்து உயர் நீதிமன்றம் மறுஆய்வு செய்வதை வரவேற்கிறேன்.
இவ்வாறு ராகுல் போஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

