விமானப்படை அதிகாரி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து மதமாற்றம்: நாக்பூரில் 2 பேர் கைது
விமானப்படை அதிகாரி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து மதமாற்றம்: நாக்பூரில் 2 பேர் கைது
UPDATED : ஜூன் 16, 2026 04:03 PM
ADDED : ஜூன் 16, 2026 03:57 PM

நாக்பூர்: விமானப்படை அதிகாரியின் மனைவியை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கட்டாய மதமாற்றம் செய்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவர் புகார்
பாதிக்கப்பட்ட பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.
போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பெண் உடன் பள்ளியில் உடன்படித்த அய்யாஸ் மதார் என்பவர், இடம் வாங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓட்டல் ஒன்றில் அவரை சந்தித்துள்ளார். அப்போது அய்யாஸ் மதார், மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தான். அதனை குடித்ததும் அந்த பெண் மயக்கமடைந்தார்.
பாலியல் துன்புறுத்தல்
அதனை பயன்படுத்தி அவரை பலாத்காரம் செய்ததுடன், ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளான். இதனை வைத்து அவரிடம் மிரட்டி 4 லட்ச ரூபாய் பணம் பறித்துள்ளான். மேலும் , மற்றொரு சந்தர்பத்தில் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து செய்வினை வைத்து விடுவோம் என மிரட்டி குளிர்பானம் குடிக்க வைத்ததுடன், பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.
மே 31 அன்று அய்யாஸ் மற்றும் அவனவது கூட்டாளி அமீன் ஷேக் இருவரும் சேர்ந்து கல்மேஸ்வர் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். ஹஸ்ரத் மவுலானா என்பவர் முன்னிலையில் அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக மதமாற்றம் செய்துள்ளனர். பிறகு வலுக்கட்டாயமாக அய்யாஸ் மதேவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பயம்
வலுக்கட்டாயமாக இறைச்சி உண்ண வைக்கப்பட்டதுடன், பிறகு ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.பிறகு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அய்யாஸ் மதாரே, மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதலில் பயம் காரணமாக வெளியில் சொல்லாத பாதிக்கப்பட்ட அந்த பெண், பிறகு கணவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.இதன் பேரில் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தலைமறைவு
வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் அய்யாஸ் மதாரே மற்றும் அமீன் ஷேக் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் திருமணம் செய்து வைத்த ஹஸ்ரத் மவுலானாவை தேடி வருகின்றனர். குறிப்பிட்ட அந்த பெண்ணை, குற்றவாளி ஒருவன் துன்புறுத்தும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
