பிர்லா எஸ்டேட்ஸ் ஒரே நாளில் ரூ.1,800 கோடி வீடுகள் விற்பனை
பிர்லா எஸ்டேட்ஸ் ஒரே நாளில் ரூ.1,800 கோடி வீடுகள் விற்பனை
ADDED : டிச 10, 2025 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: குருகிராமில் 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பிரீமியம் வீடுகளை, 24 மணி நேரத்துக்குள் ஆதித்ய பிர்லா ரியல் எஸ்டேட் குழுமத்தின் துணை நிறுவனமான பிர்லா எஸ்டேட்ஸ் விற்றுள்ளது.
பங்குச்சந்தையில், அந்நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:
குருகிராமின் செக்டார் 71 பகுதியில், பிர்லா பிரவா பெயரில் அமைந்துள்ள 492 பிரீமியம் வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் முழுதும் விற்பனை ஆகியுள்ளன. இது பிராண்டுக்கு முக்கியமான மைல்கல் மட்டுமின்றி, டில்லி என்.சி.ஆர்., சந்தையில் வலுவான வளர்ச்சி இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

