sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வயது முதிர்ந்தவர்களுக்கு 'சீட்' மறுப்பு புது முகங்களுக்கு அடித்தது யோகம்

/

வயது முதிர்ந்தவர்களுக்கு 'சீட்' மறுப்பு புது முகங்களுக்கு அடித்தது யோகம்

வயது முதிர்ந்தவர்களுக்கு 'சீட்' மறுப்பு புது முகங்களுக்கு அடித்தது யோகம்

வயது முதிர்ந்தவர்களுக்கு 'சீட்' மறுப்பு புது முகங்களுக்கு அடித்தது யோகம்


ADDED : மார் 15, 2024 06:57 AM

Google News

ADDED : மார் 15, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ., சீட் வழங்குவதில், புது யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல், தற்போதைய ஒன்பது எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், பெங்களூரு வடக்கில், மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா, சீட் பெற்றார்.

அரசியல் அனுபவம் இல்லாத புது முகங்களுக்கும், தற்போது எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,யாக இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்றும், வாய்ப்பு வழங்கியது ஏன் என்பதற்கும் தலா மூன்று காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பு கிடைக்காத எம்.பி.,க்கள்:

15_Sadananda Gowda

பெங்களூரு வடக்கு - சதானந்தகவுடா, 70:

* மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கம்

* அமைச்சர், எம்.பி.,யாக சரியாக செயல்படாதது

* வயது முதிர்வு

15_Srinivas Prasad

சாம்ராஜ்நகர் - சீனிவாச பிரசாத், 76:

* உடல் நலன் பாதிப்பு

* வயது முதிர்வு

* தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

15_Basavaraju

துமகூரு - பசவராஜு, 82:

* வயது முதிர்வு

* உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு

* தேர்தலில் போட்டியிட விருப்பமின்மை

15_Karadi Sanganna

கொப்பால் - கரடி சங்கண்ணா, 73:

* கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள் எதிர்ப்பு

* எம்.பி.,யாக சரியாக செயல்படாமை

* குறைந்த செல்வாக்கு

15_Siddehswar

தாவணகெரே - சித்தேஸ்வர், 71:

* வயது முதிர்வு

* கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள் எதிர்ப்பு

* அனுபவம் இருந்தும், செயல்படாமை

15_Nalin Kumar Kateel

தட்சிண கன்னடா - நளின்குமார் கட்டீல், 57:

* 3 முறை எம்.பி.,யாகியும் செயல்படாமை

* தொகுதியில் வளர்ச்சி பணிகள் மந்தம்

* மாநில தலைவராக கட்சியை வளர்ப்பதில் தோல்வி

15_Prathap Simha

மைசூரு - பிரதாப் சிம்ஹா, 47:

* தொண்டர்களிடம் இடைவெளி

* தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது

* சர்ச்சை விஷயங்களில் சிக்கியது

15_Shivakumar Udasi

ஹாவேரி - சிவகுமார் உதாசி, 56:

* தேர்தலில் போட்டியிட விருப்பமின்மை

* தொகுதியில் இருந்து விலகி இருந்தது

* கட்சியை பலப்படுத்துவதில் செயல்படாமை

15_Devendrappa

பல்லாரி - தேவேந்திரப்பா, 72:

* வயது முதிர்வு

* எம்.பி.,யாக சரியாக செயல்படாமை

* மக்களிடம் எதிர்ப்பு அதிகரிப்பு

**************

15_Yaduveer

மைசூரு - யதுவீர், 31:

* மன்னர் வம்சம் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பு

* பிரதாப் சிம்ஹா மீதான எதிர்ப்பு அலை

* இளைஞர், புதுமுகம், சிறந்த வரலாற்று பின்னணி

15_Manjunath

பெங்களூரு ரூரல் - மஞ்சுநாத், 66:

* மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு

* காங்., சுரேஷுக்கு இணையான செல்வாக்கு

* ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆதரவு

15_Balraj

சாம்ராஜ்நகர் - பால்ராஜ், 40

* இளைஞர்களின் ஆதரவு

* நீண்ட கால அரசியலுக்கு உகந்த நபர்

* காங்கிரஸ் ஓட்டுகளை ஈர்க்கும் திறமை

15_Brijesh Chowta

தட்சிண கன்னடா - பிரிஜேஷ் சவுடா, 42:

* புது முகத்தால் கூடுதல் லாபம்

* முன்னாள் ராணுவ வீரர், படித்தவர்

* கட்சியை பலப்படுத்துவதில் ஆர்வம்

15_Gayathri Siddeshwar

தாவணகெரே - காயத்ரி சித்தேஸ்வர், 67:

* எம்.பி., சித்தேஸ்வர் குடும்பம்

* மகளிர் கோட்டாவில் வாய்ப்பு

* மக்களின் ஆதரவு பெற்றவர்

15_Shobha

பெங்களூரு வடக்கு - ஷோபா, 57:

* மகளிருக்கு முன்னுரிமை

* ஒக்கலிகர் ஓட்டு வங்கி

* எடியூரப்பா ஆதரவு

15_Somanna

துமகூரு - சோமண்ணா, 73:

* துமகூரு மடாதிபதியின் ஆதரவு

* தொகுதியை தக்க வைக்கும் கணக்கு

* தேவகவுடாவின் சிபாரிசு

15_Basavaraj Gavatar

கொப்பால் - பசவராஜ் கியாவடார், 38:

* இளைஞர், ஆர்வத்துடன் செயல்படுபவர்

* சாமானிய தொண்டர் என்ற ஆதரவு அலை

* மருத்துவராக மக்களிடையே செல்வாக்கு

15_Kota Srinivas Poojary

உடுப்பி, சிக்கமகளூரு - கோட்டா சீனிவாச பூஜாரி, 64:

* கட்சிக்கு நேர்மையாக செயல்படுதல்

* சர்ச்சையில் சிக்காத எளிய தலைவர்

* சாதாரண தொண்டரும் சுலபமாக சந்திக்கும் நபர்

15_Basavaraj Bommai

ஹாவேரி - பசவராஜ் பொம்மை, 64:

* எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு உரியவர்

* இரண்டாம் கட்ட லிங்காயத் தலைவர்

* முதல்வரான அரசியல் அனுபவம்

15_Sriramulu

பல்லாரி - ஸ்ரீராமுலு, 53:

* எஸ்.டி., சமுதாய தலைவர்

* தொகுதியில் அசைக்க முடியாத நம்பிக்கை

* கட்சியை பலப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவர்

***

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us