தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சிறையில் 'மொபைல் போன்' தேவகவுடா பேரன் மீது வழக்கு

சிறையில் 'மொபைல் போன்' தேவகவுடா பேரன் மீது வழக்கு

சிறையில் 'மொபைல் போன்' தேவகவுடா பேரன் மீது வழக்கு

4


ADDED : ஆக 12, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 09:01 PM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு சிறையில், 'மொபைல் போன்' பயன்படுத்தியதாக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல், 35; ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி.,யான இவர், பல்வேறு பலாத்கார வழக்குகளில் கைதாகி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் ஒரு வழக்கில், இவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று (ஆக.,11) மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது; அங்கு எதுவும் சிக்கவில்லை.

பிரஜ்வல் அறையில், 'ரெட்மி' நிறுவனத்தின், '5 ஜி' மொபைல் போன், சார்ஜர் ஒயர், பென் டிரைவ், ஒரு நோட்டு சிக்கியது. பிரஜ்வலும், அவரது அறையில் உள்ள சக கைதி பிரதாப் ராயும் மொபைல் போன் பயன்படுத்தியது தெரிந்தது.

அந்த மொபைல் போனில், 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்' செயலிகள் இருந்தன. பிரதாப் ராய்க்கு சொந்தமான அந்த போனை பிரஜ்வல் பயன்படுத்தியதுடன், தன் வக்கீல்களிடம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிய சாமி புகாரில், பிரதாப் ராய், பிரஜ்வல் மீது பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறைத் துறை டி.ஜி.பி., அலோக்குமார் கூறுகையில், ''பணியில் அலட்சியமாக செயல்பட்ட சிறை உதவி கண்காணிப்பாளர் ஈரண்ணா ரங்காபுரா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.

பிரஜ்வலின் சித்தப்பாவும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி கூறுகையில், ''சிறையில், பிரஜ்வல் அறையில் மொபைல் போன் சிக்கியது பற்றி எனக்கு தெரியாது. இந்த கேள்வியை நீங்கள் அரசிடம் தான் கேட்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us