எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க காலக்கெடு விதிக்கக்கூடாது: மத்திய அரசு
எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க காலக்கெடு விதிக்கக்கூடாது: மத்திய அரசு
ADDED : டிச 02, 2025 03:12 PM

புதுடில்லி; எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கலாம், ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் காலக்கெடு எதுவும் விதிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பார்லிமெண்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. அவையின் முதல் நாளே நேற்று, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் தொடக்கம் முதலே ஒத்தி வைக்கப்பட்ட இரு அவைகளும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
2ம் நாளான இன்று பார்லிமெண்ட் கூடியது. அப்போது, எஸ்ஐஆர் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ராஜ்யசபாவில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, எஸ்ஐஆர் குறித்து விதி 267ன் கீழ் உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர், இது குறித்து விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந் நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது;
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது. ஆனால் அதற்காக எதிர்க்கட்சிகள் காலக்கெடுவை வலியுறுத்தக் கூடாது என்றார்.

