முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக.,30ல் நுழைவுத் தேர்வு:செப்.30ல் முடிவு வெளியீடு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக.,30ல் நுழைவுத் தேர்வு:செப்.30ல் முடிவு வெளியீடு
ADDED : ஜூலை 01, 2026 07:34 PM

புதுடில்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்டி - எம்எஸ் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஆக.,20ம் தேதி நடக்கிறது.
இன்று(ஜூலை 1) முதல்ஜூலை 21 வரை விண்ணப்பம் செய்யலாம்.
தேர்வு மையம் குறித்த அறிவிப்பு ஆக.,11ம் தேதி வெளியாகும்
தேர்வு ஆக.,30 ல் நடக்கும்.
தேர்வு முடிவுகள் செப்., 30ம் தேதி வெளியாகும்.
இந்தத் தேர்வில், தேர்வு மையம் மற்றும் நகரம் என்பது முதலில் வருபவர்களுக்கு முதலில் முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்காது. முன்னதாகவே விண்ணப்பம் செய்பவர்களுக்கு தேர்வு எழுத குறிப்பிட்ட மாநிலம், மையம், நகரம் ஒதுக்கீடு செய்வதற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது என்பதை தேர்வர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
