sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடக்காத ஒன்றுக்காக நாடகம் ஆடுகிறது இண்டி கூட்டணி!

/

நடக்காத ஒன்றுக்காக நாடகம் ஆடுகிறது இண்டி கூட்டணி!

நடக்காத ஒன்றுக்காக நாடகம் ஆடுகிறது இண்டி கூட்டணி!

நடக்காத ஒன்றுக்காக நாடகம் ஆடுகிறது இண்டி கூட்டணி!

5


ADDED : டிச 09, 2025 01:22 PM

Google News

5

ADDED : டிச 09, 2025 01:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



-நமது நிருபர்-

தங்களிடம் இருக்கும் எம்.பி.,க்களின் பலத்தை கொண்டு, உயர்நீதி மன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வாய்ப்பில்லை என்று நன்கு தெரிந்திருந்தும், திமுக எம்.பி.,க்கள், பார்லியில் இன்று அதற்கான மனு தயார் செய்து கொடுத்தனர்.

மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதியாக இருப்பவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர். அண்மையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இவரது உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாமல் மேல்முறையீடு செய்து இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்ட நிலையிலும், தமிழக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

அதற்கு மாறாக, தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிரான அவதுாறு பிரசாரத்தில், திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். லோக்சபாவில் இன்று, இண்டி கூட்டணியினர் சார்பில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீஸ் சபாநாயகரிடம் தரப்பட்டது. எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர், பாலு, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இதை சபாநாயகரிடம் வழங்கினர்.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் தங்கள் கையெழுத்தை பதிவிட்டு உள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மற்ற மாநில கட்சிகளின் எம்பிக்களும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.

விதிமுறை சொல்வது என்ன?

உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக லோக்சபா எம்.பி.,க்கள் 100 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 50 பேர் கையெழுத்திட்டு, முறையே சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரிடம் மனு தர வேண்டும்.

இந்த மனுவை ஏற்பதா, இல்லையா என்பதை சபாநாயகர்/ராஜ்யசபா தலைவர் முடிவு செய்வார். ஏற்றுக்கொள்ளப்பட்டால், மூன்று உறுப்பினர் குழு அமைத்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணைக்குழுவானது, தங்கள் அறிக்கையை, சபாநாயகர்/ ராஜ்யசபா தலைவரிடம் சமர்ப்பிக்கும். சம்பந்தப்பட்ட நீதிபதி குற்றவாளி என்று குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தால், பார்லி அவைகளின் விவாதத்துக்கும், ஓட்டெடுப்புக்கும் விடப்படும்.

ஓட்டெடுப்பு எப்படி

இரு அவைகளிலும், கலந்துகொண்டு ஓட்டளிக்கும் உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகே, அவர் நீதிபதியை பதவி நீக்கும் செய்து உத்தரவிடுவார்.

திமுக அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு இத்தகைய பலம் லோக்சபாவிலும் இல்லை; ராஜ்யசபாவிலும் இல்லை. எனவே, அவர்களது மனு, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு விடுவதற்கான வாய்ப்பு தான் இருக்கிறது.

அப்படியெனில், அவர்களது நோக்கம் என்ன? 'தாங்கள் இந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக இப்படியெல்லாம் செய்தோம்' என்று கூறி தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவே இத்தகைய மனுக்களை கொடுத்து நாடகம் ஆடுகின்றனர் என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.






      Dinamalar
      Follow us