உலகளவில் யு.பி.ஐ.,முதலிடம் பன்னாட்டு நிதியம் பாராட்டு
உலகளவில் யு.பி.ஐ.,முதலிடம் பன்னாட்டு நிதியம் பாராட்டு
ADDED : டிச 10, 2025 01:28 AM

புதுடில்லி: உலகின் மிகப்பெரிய, விரைவான பணம் செலுத்தும் வழியாக யு.பி.ஐ., முறையை ஐ.எம்.எப்., அமைப்பு அங்கீகரித்துள்ளது.
இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
ஐ.எம்.எப்., அமைப்பு, 'வளர்ந்து வரும் டிஜிட்டல் சில்லரை பணம் செலுத்தும் முறை' என்ற பெயரில் கடந்த ஜூன் மாதம் ஆய்வு நடத்தியது. உலகின் மற்ற பணம் செலுத்தும் முறைகளைவிட, இந்தியாவின் யு.பி.ஐ., முறை மிகப்பெரியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேர்ல்டுவைடு பிரைம் டைம் பார் ரியல் டைம் 2024 (ஏ.சி.ஐ., வேர்ல்டு வைடு) அறிக்கையின்படி, உலக அளவில் ரியல் டைம் பேமென்ட் முறைகளில் 49 சதவீத பங்கை யு.பி.ஐ., பிடித்திருக்கிறது. இந்தியாவில் 12,930 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பிரேசில், தாய்லாந்து, சீனா, தென்கொரியா நாடுகளின் பரிவர்த்தனைகள், இந்தியாவைவிட மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன.
2024--25 நிலவரம்
கியூ.ஆர்., கோடு பரிவர்த்தனைகள்
56.86 கோடி
பரிவர்த்தனை மேற்கொண்டவர்கள்
6.50 கோடி

