தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பெங்களூருவில் 31 கிமீ செல்ல 2.5 மணி நேரம்; டிராபிக்கில் சிக்கிய இன்போசிஸ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

பெங்களூருவில் 31 கிமீ செல்ல 2.5 மணி நேரம்; டிராபிக்கில் சிக்கிய இன்போசிஸ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

பெங்களூருவில் 31 கிமீ செல்ல 2.5 மணி நேரம்; டிராபிக்கில் சிக்கிய இன்போசிஸ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

4


ADDED : ஜூலை 05, 2026 03:57 PM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : ஜூலை 05, 2026 03:57 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரூ: பெங்களூருவில் 31 கிமீ பயண தூரத்தை கடக்க இரண்டரை மணி நேரம் ஆனது என்று இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளது, வைரலாகி இருக்கிறது.

நாட்டின் பெருநகரங்களில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம். சாலை உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டாலும் வாகனங்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியும் பயணிகளை பாடாய்படுத்துவது உண்டு. .குறிப்பாக கர்நாடக மாநிலம், பெங்களூருவின் போக்குவரத்து நெருக்கடியை உணராதவர் வெகு சிலரே. நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில், அப்படியான ஒரு போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்ட இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தமது அனுபவத்தை எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது;

வெறும் 31 கிமீ பயண தூரத்தை கடக்க கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆனது. நிலைமை மோசமாகி கொண்டே போகிறது.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், சாலைகளின் தரம், ஒழுங்கின்றி வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் ஆகியோரின் செயல்பாடுகளே இதற்கு காரணம்.

இவ்வாறு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டு உள்ளார்.

அவரது பதிவை கண்ட பலரும், அவரவருக்கு நேர்ந்த போக்குவரத்து நெருக்கடிகளை பகிர்ந்து கொண்டனர். பெங்களூருவின் போக்குவரத்து நிலை ஒரு கெட்ட கனவு என்று பலரும் பதிவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us