புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது: மத்திய அமைச்சர் ராம் மோகன்
புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது: மத்திய அமைச்சர் ராம் மோகன்
ADDED : டிச 09, 2025 03:44 AM

புதுடில்லி: ''முறையாக திட்டமிடப்படாததே, 'இண்டிகோ' விமான நிறுவனத்தின் பிரச்னைக்கு காரணம். விமானத் துறையில் உள்ள வாய்ப்புகளை பங்குதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது,'' என, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
விமானிகளுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்டவற்றில் விமான போ க்குவரத்து அமைச்சகம் திருத்தம் செய்தது.
இந்த புதிய நடை முறை, நவ., 1 முதல் அமலுக்கு வந்தது. இதற்கு, நம் நாட்டில் அதிக விமா ன சேவைகளை வழங்கும், தனியார் துறையைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனமான இண்டிகோ கடு ம் எதிர்ப்பு தெரிவித்தது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுதும் முடங்கின. இதனால் ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள், திடீரென விமான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தின. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயித்தது.
இந்நிலை யில், 'இண்டிகோ' விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து அமை ச்சர் ராம் மோகன் நாயு டு நேற்று கூறியதாவது:
இது, 'இண்டிகோ' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயல்பாட்டு பிரச்னை. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணி அட்டவணையை அந்நிறுவனம் முறையாக திட்டமிடாததே இதற்கு காரணம்.
நவ., 1ம் தேதி கூட, அந்நிறுவனத்தின் உயர்அதிகாரிகளுடன் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் உடனடியாக தீர்வு அளிக்கப்பட்டது. எனினும், அந்நிறுவனம் முறையாக திட்டமிடவில்லை.
இது அந்நிறுவனத்துக்கு மட்டுமல்ல, விமான போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு பாடம். 'இண்டிகோ' விவகாரத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
விமானத் துறையில் உள்ள வாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது. இது தொடர்பாக தொழில் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

