நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ADDED : டிச 09, 2025 05:06 AM

கொச்சி: நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, மலையாள திரைப்பட நடிகர் திலீப்பை விடுதலை செய்த கேரள நீதிமன்றம், சுனில் உள்பட ஆறு பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.
க டந்த 2017, பிப்ரவரியில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், அங்கமாலி அருகே, பிரபல நடிகை ஒருவர், படப்பிடிப்பு முடித்துவிட்டு வேனில் வீடு திரும்பிக் கொ ண்டிருந்தார். அத்தா ணி பகுதியில், அவரது வேனை ஒரு கும்பல் வழிமறித்தது .
கொலை மிரட்டல் உள்ளே சென்ற கும்பல், நடிகைக்கு பாலியல் தொல்லை தந்தது. இந்தக் காட்சிகளை, 'மொபைல் போன்' மூலம் படம் பிடித்து வேறொரு நபருக்கு அனுப்பியதாக வும் கூறப்பட்டது.
ஓடும் வேனில் இரண்டு மணி நேரம் நடிகையை தங்கள் கஸ்டடியில் வைத்திருந்த கும்பல், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வேனை நிறுத்திவிட்டு தப்பியது.
இது குறித்து நடிகை அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரிடம் டிரைவராக இருந்த சுனில் என்ற 'பல்சர்' சுனிலை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
விசாரணையில், சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகைக்கும் இடையிலான முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.
சுனில் அளித்த தகவலின்படி, அவரின் கூட்டாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், 2017, ஜூலையில் நடிகர் திலீப் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம், 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப், இரண்டரை மாதத்துக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. கொரோனா தொற்று பரவலை அடுத்து விசாரணை முடங்கியது.
வழக்கு பதிவு வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய முயன்றதாகவும் நடிகர் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மலையாள திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படவும் இந்த வழக்கு காரணமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 25ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட, 261 பேர் இந்த வழக்கில் சாட்சியளித்தனர்; 28 பேர் அப்ரூவராக மாறி, பிறழ் சாட்சியம் அளித்தனர்.
வழக்கு தொடர்பாக, 834 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், போதிய ஆதாரம் இல்லாததால், நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டார். மேலும் வழக்கில் தொடர்புடைய மூவர் விடுவிக்கப்பட்டனர்.
சுனில், மார்டின் அந்தோணி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகிய ஆறு பேரும் குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான தண்டனை விபரம், வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடிகை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில அரசும், முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
மேல்முறையீடு இதுகுறித்து மாநில சட்ட அமைச்சர் ராஜீவ் கூறுகையில், “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு நீதி வழங்குவதில், கேரள அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்த வழக்கில், குற்றவாளிகள் யாரும் தப்பிவிடாமல் இருக்க அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்படும்,” என்றார்.

