நகரங்கள் சூறையாடல், அப்பாவி மக்கள் படுகொலை: கஜினி முகமது படையெடுப்பில் நடந்தது இதுதான்!
நகரங்கள் சூறையாடல், அப்பாவி மக்கள் படுகொலை: கஜினி முகமது படையெடுப்பில் நடந்தது இதுதான்!
ADDED : டிச 07, 2025 06:03 PM

புதுடில்லி: கஜினி முகமதுவின் படையெடுப்புகள் குறித்து 7 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மத்திய அரசின் தேசியக் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
'Exploring Societies: India and Beyond' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் மதுரா மற்றும் சோமநாதர் நகரங்களில் அடிக்கப்பட்ட கொள்ளை குறித்து விரிவாக தோற்கடிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:முகமது கஜினியின் பிரசாரங்கள் அழிவு மற்றும் கொள்ளையை பற்றி இருந்தது. பல்லாயிரக்கணக்கான அப்பாவி இந்திய மக்கள் கொல்லப்பட்டனர். மத்திய ஆசியாவின் அடிமைச் சந்தைகளில் குழந்தைகள் மற்றும் கைதிகள் விற்பனை செய்யப்பட்டனர்.
வரலாற்று ஆசிரியர்கள் அவரை சக்திவாய்ந்த ஆனால், கொடூரமான மற்றும் இரக்கமற்ற தளபதியாக குறிப்பிடுகின்றனர். ஹிந்துக்கள், பவுத்தர்கள் மற்றும் சமண மதத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வது அல்லது அடிமைப்படுததுவதிலும், இஸ்லாம் போட்டி பிரிவுகளை சேர்ந்தவர்களை கொல்வதிலும் கஜினி முகமது உறுதியாக இருந்தார். இந்தியா மீது கஜினி முகமது 17 முறை படையெடுப்புகளை மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் ஏராளமான பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றார்.
கஜினி முகமதுவுக்கு வலுவான எதிர்ப்பு இருந்தது. பல சந்தர்ப்பங்களில் தோல்வியில் இருந்து நூலிழையில் தப்பித்தாலும் அவரது பெரிய ராணுவத்தின் படையெடுப்பும், குதிரை வீரர்களின் ஆதரவுடன் துணிச்சலான குதிரைப்படை தாக்குதல்களும் தீர்க்கமானவையாக இருந்தது.
கண்ணூஜ் நகருக்கு செல்வதற்கு முன்பு கஜினி முகமது, கோயில்களை இடித்து தள்ளிவிட்டு, அங்கு கொள்ளையடித்து சென்றார். அங்கு பல கோயில்களை கொள்ளையடித்து அழித்தார். பிறகு மற்றொரு படை எடுப்பு மூலம் குஜராத்தின் சோமநாத்திற்கு படையெடுத்து சென்றார். அங்கு அவருக்கு உள்ளூர் மக்களிடம் வலுவான எதிர்ப்பு இருந்தது. அவரது படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டன. இருப்பினும் பல நாட்கள் சண்டைக்கு பிறகே கஜினி முகமதுவுக்கு வெற்றி கிடைத்தது. அங்கிருந்த சிவன் கோவிலை அழித்ததுடன், அங்கிருந்த பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றார் என அந்த புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்தியாவின் அறிவியல் மரபுகளில் கஜினி முகமதுவின் ராணுவ பிரசாரங்களின் தாக்கத்தை குறிப்பிட்ட பாரசீக அறிஞர் அபு ரெய்ன் அல்பிருனியின் கூற்று மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

