ஆர்.எஸ்.எஸ்., வருமான ஆதாரம் என்ன? பாகவத்துக்கு அமைச்சர் கடிதம்!
ஆர்.எஸ்.எஸ்., வருமான ஆதாரம் என்ன? பாகவத்துக்கு அமைச்சர் கடிதம்!
ADDED : ஜூன் 16, 2026 12:47 AM

பெங்களூரு: 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வருமான ஆதாரம் என்ன' என்று விளக்கம் கேட்டு, அதன் தலைவர் மோகன் பாகவத்துக்கு, காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக இருக்கும் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதியுள்ள கடிதம்:
ஆர்.எஸ்.எஸ்., 100 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதற்கு வாழ்த்துகள். ஆர்.எஸ்.எஸ்.,சின் சட்டபூர்வ நிலை, அமைப்பின் பதிவு, பொது செயல்பாடுகளுக்கான அனுமதி குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், அமைப்பின் அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் பற்றிய விபரம்; நன்கொடைகள் மற்றும் அமைப்பின் வருமான ஆதாரங்கள்; செலவுகள் மற்றும் சொத்து விபரங்கள்; சட்டப்படி வரிகள் தவறாமல் செலுத்தப்படுகின்றனவா என்பதற்கான ஆதாரங்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளக்கம் அளிக்கப்படும்!
பிரியங்க் கடிதத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்., விளக்கம் அளிக்கும். 100 ஆண்டுகளாக நாட்டு நலன், மக்களுக்காக ஆர்.எஸ்.எஸ்., உழைத்துள்ளது. அமைப்பை பற்றி கேள்வி கேட்கும் முதல் நபர் என, பிரியங்க் பெருமையாக நினைத்து கொள்கிறார். இதற்கு முன்னே பலர் கேள்வி எழுப்பி விளக்கத்தையும் பெற் று உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.,சை பிரியங்க் விரோதியாக பார்க்கும் வரை, கர்நாடகாவில் அந்த அமைப்பு இன்னும் வலுவடையும்.
- தேஜஸ்வி சூர்யா லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,
பதிவு தேவையில்லை!
பிரியங்க் கார்கே கடிதத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டில் பதிவு செய்யப்படாத பல விஷயங்கள் இருக்கின்றன. ஹிந்து மதமும் பதிவு செய்யப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்., அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. கடந்த 100 ஆண்டுகளில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பதிவு செய்யுங் கள் என எங்களிடம் யாரும் கூறவில்லை. அரசிடம் நிதி பெற விரும்புபவர்கள் தான் தங்களது அமைப்பை பதிவு செய்வர்.
- மோகன் பாகவத், தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
