sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சபரிமலையில் நனவாகிறது ரோப்வே ட்ரோன் மூலம் வெட்டப்படும் மரங்கள் நிர்ணயம்

/

 சபரிமலையில் நனவாகிறது ரோப்வே ட்ரோன் மூலம் வெட்டப்படும் மரங்கள் நிர்ணயம்

 சபரிமலையில் நனவாகிறது ரோப்வே ட்ரோன் மூலம் வெட்டப்படும் மரங்கள் நிர்ணயம்

 சபரிமலையில் நனவாகிறது ரோப்வே ட்ரோன் மூலம் வெட்டப்படும் மரங்கள் நிர்ணயம்


ADDED : டிச 09, 2025 03:39 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: சபரிமலையில் ரோப்வே அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை ட்ரோன் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் நீண்ட நாள் கனவாக ரோப்வே உள்ளது. பம்பையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் மலை மீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. துவக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் தற்போது டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகின்றன. டிராக்டர்களின் ஓட்டம் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ரோப்வே அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து பல கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.

பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கி.மீ., தூரத்திற்கு ரூ.271 கோடி செலவில் ரோப்வே அமைக்கப்படுகிறது.

காட்டின் உட்பகுதியில் மொத்தம் ஐந்து தூண்கள் நிறுவப்படும். இதற்காக மரங்கள் வெட்டுவது குறித்து பல கட்ட ஆய்வுகள் நடந்தன. மரங்கள் வெட்டுவதற்காக லேசர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட கணக்கு சரிவரவில்லை என பெரியாறு வனவிலங்குகள் சரணாலய போர்டு தெரிவித்தது.

இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம் அனுமதியுடன் டிரோன் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று வனவிலங்கு சரணாலய போர்டின் கூட்டம் நடக்கிறது. இதில் ரோப்வே அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு செய்யப்படுகிறது.

2026 மகரஜோதி திருவிழாவின் போது இதற்கு அடிக்கல் நாட்டப்படும் என போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட 18 ஸ்டெப்ஸ் தாமோதர் கேபிள் கார் நிறுவனம் இதை நிறுவுகிறது. மொத்தம் 60 கேபிள் கார்கள் இதில் பயன்படுத்தப்படும். பம்பையில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வற்காக இது நிறுவப்பட்டாலும் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் இதை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us