முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி கேட்பதாக பேசிய சித்து மனைவி; காங்கிரசில் இருந்து 'சஸ்பெண்ட்'
முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி கேட்பதாக பேசிய சித்து மனைவி; காங்கிரசில் இருந்து 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 09, 2025 06:26 AM

சண்டிகர்: 'ப ஞ்சாபில், 500 கோடி ரூபாய் கொடுப்பவர்களே முதல்வர் ஆகின்றனர்' என, அம்மாநில காங்., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து அக்கட்சி மேலி டம் உத்தவிட்டுள்ளது.
ப ஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மியிடம் காங்., ஆட்சியை பறிகொடுத்தது .
முந்தைய காங்., அரசில் அமைச்சராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தார். 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் அவர் ஈடுபடவில்லை.
ச மீபத்தில், சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், 'பஞ்சாபில், 500 கோடி ரூபாய் கொடுப்பவர்களே முதல்வர் நாற்காலியில் அமர்கின்றனர். இது எல்லா கட்சியிலும் நடக்கிறது. ஆனால், எந்த கட்சிக்கும் கொடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை' என்றார்.
இது, பஞ்சாப் அரசியலில் புயலைக் கிளப்பியது. காங்கிரசில் பண மூட்டை அரசியல் விளையாடுவதாக ஆம் ஆத்மி, பா.ஜ., விமர்சித்தன. ஆளும் ஆம் ஆத்மியின் பஞ்சாப் பொதுச்செயலர் பல்தேஜ் பன்னு, ''500 கோடி ரூபாய் கொடுத்தால் தான் காங்கிரசில் முதல்வர் பதவி கிடைக்கிறது என, அக்கட்சி மூத்த தலைவர் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரே தெரிவித்துள்ளார்.
'' இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்? மீண்டும் ஒரு முறை காங்கிரசின் உண்மை முகம் அம்பலமாகி உள்ளது. அக்கட்சியில் பண மூட்டை அரசியல் விளையாடுகிறது,'' என்றார் .
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நவ்ஜோத் கவுர் அளித்த விளக்கம்:
கா ங்., மேலிடம் எங்களிடம் எந்த பணமும் கேட்கவில்லை. கட்சியில் பணம் கேட்கப்படுவதாக நான் ஒருபோதும் கூறவில்லை. என் பேட்டியை வேண்டு மென்றே சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர்.
நவ் ஜோத் சித்து மாற்று கட்சியிலிருந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என, கேட்கப்பட்ட கேள்விக்கு, 'முதல்வர் பதவிக்கு கொடுக்க எங்களிடம் பணம் இல்லை' என்றே பதிலளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, நவ்ஜோத் கவுரை காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் காங்., நேற்று உத்தரவிட்டது.

