கட்சி உறுப்பினர்களுக்கு 'சீட்' சிரிகெரே சுவாமிகள் ஆசை
கட்சி உறுப்பினர்களுக்கு 'சீட்' சிரிகெரே சுவாமிகள் ஆசை
ADDED : மார் 16, 2024 10:52 PM

விஜயநகரா: ''அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மட்டும், தேர்தலில் 'சீட்' கொடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும்,” என, சிரிகெரே தரளபாளு மடத்தின் சிவமூர்த்தி சிவாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார்.
விஜயநகரா, ஹரப்பனஹள்ளியில் மைதுார் கிராமத்தில் நேற்று அவர் கூறியதாவது:
அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருப்போர் பெயரை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு தாவுவோருக்கு, கடிவாளம் போட முடியும். இத்தகைய சட்டத்தை கொண்டு வரும் அதிகாரம், எனக்கு இருந்திருந்தால், அமல்படுத்த தயங்கவே மாட்டேன்.
கட்சி தாவுபவர்களுக்கு, மக்கள் ஓட்டு போடக்கூடாது. இன்றைய அரசியல் எலி, பூனை, பாம்பு, கீரி கதை போன்றுள்ளது. ஒரு அரசியல்வாதி தவறு செய்தால், மற்றொரு அரசியல்வாதி சுட்டிக்காண்பிக்கட்டும். ஆதாரங்கள் இல்லாமல், பரஸ்பரம் குற்றஞ்சாட்டக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

