தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு; சித்தராமையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு; சித்தராமையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ADDED : டிச 09, 2025 05:07 AM

புதுடில்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வருணா சட்டசபை தொகுதியில், 2023ல் நடந்த தேர்தலில், சித்தராமையா வெற்றி பெற்றார்.
இலவச பஸ் பயணம் தேர்தலுக்கு முன் சித் தராமையா, 'மகளிருக்கு இலவச பஸ் பயணம், 200 யூனிட் இலவச மி ன்சாரம்' உள்ளிட்ட ஐந்து இலவச வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
இதற்கிடையில், சித்தராமையாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, வருணா தொகுதி வாக்காளர் சங்கர் என்பவர், கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, இலவச வாக்குறுதிகள் மூலம், வாக்காளர்களை கவர்வது லஞ்சம் கொடுப்பதற்கு சமம்.
இது வாக்காளர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் முயற்சியாகும். இலவச வாக்குறுதிகளை விளம்பரப்படுத்துவதும் குற்றம். எனவே, சித்தராமையா வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என கோரியிருந்தார்.
மேல்முறையீடு விசாரணையில், சித்தராமையா தரப்பு வக்கீல், 'மனுதாரர், நீதிமன்றத்தை மட்டுமின்றி, உலகத்தையே திசை திருப்புகிறார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்சியினுடையது. இதையும் என் மனுதாரர் மீது சேர்க்க வேண்டுமா' என வாதிட்டார்.
இதையடுத்து, சங்கரின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இம்மனு, நீதி பதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் ஆய்வு செய்த நீதிபதிகள், முதல்வர் சித்தராமையா, தலைமை தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

