திருட்டு பழி சுமத்திய ஆசிரியை மாணவி துாக்கிட்டு தற்கொலை
திருட்டு பழி சுமத்திய ஆசிரியை மாணவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 18, 2024 05:47 AM

பாகல்கோட், : ஆசிரியை திருட்டு பழி சுமத்தியதால், எட்டாம் வகுப்பு மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகல்கோட் அருகே கடம்பூர் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளி கன்னட ஆசிரியை ஜெயஸ்ரீ. கடந்த 14ம் தேதி பள்ளிக்கு 2,000 ரூபாய் கொண்டு வந்தார். அந்த பணம் திடீரென காணாமல் போனது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, திருடியதாக, ஜெயஸ்ரீக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் சம்பந்தப்பட்ட மாணவி உட்பட பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவியரையும், ஒரு அறைக்கு அழைத்து சென்று, ஜெயஸ்ரீயும், தலைமை ஆசிரியர் முஜாவரும் விசாரித்து உள்ளனர். பின்னர் கோவிலுக்கு அழைத்து சென்று, பணத்தை எடுக்கவில்லை என்று, சத்தியம் செய்ய வைத்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில், மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியை திருட்டு பழி சுமத்தியதாலும், கோவிலுக்கு அழைத்து சென்று சத்தியம் வாங்கியதாலும், மனம் உடைந்த தற்கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
மாணவியின் உடைகளை அவிழ்த்து, சோதனை செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
ஆசிரியை ஜெயஸ்ரீ, தலைமை ஆசிரியர் முஜாவர் மீது, பாகல்கோட் ரூரல் போலீசார், வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

