"இண்டியா கூட்டணி என்பது வாரிசுகளின் கூட்டணி": மத்திய அமைச்சர் தாக்கு
"இண்டியா கூட்டணி என்பது வாரிசுகளின் கூட்டணி": மத்திய அமைச்சர் தாக்கு
UPDATED : மார் 17, 2024 05:10 PM
ADDED : மார் 17, 2024 05:04 PM

புதுடில்லி: 'இண்டியா கூட்டணி என்பது சுயநலம் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் வாரிசு அரசியலில் ஈடுபடுவர்களே உள்ளனர்' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் சட்டத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடமை. ஆனால் அவர் அதை கடைபிடிக்கவில்லை.
மக்கள் மூன்றாவது முறையாக மோடியை பிரதமர் ஆக்க முடிவு செய்துள்ளனர். இதற்குக் காரணம் அவர் நாட்டிற்காக பாடுபட்டு உள்ளார். இண்டியா கூட்டணி என்பது சுயநலம் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் வாரிசு அரசியலில் ஈடுபடுவர்களே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ராகுலின் 2 பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் துவங்கி, இன்று மும்பையில் நிறைவடைகிறது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' இண்டியா கூட்டணியினரின் போட்டோ ஷூட் பீஹார் மாநிலம் பாட்னாவில் துவங்கியது. தற்போது இந்த போட்டோ ஷூட் மும்பையில் நிறைவடையும்'' என பதில் அளித்தார்.

