தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சட்ட நடைமுறைகளில் ஏஐ பயன்பாடு: சுப்ரீம் கோர்ட் கவலை

சட்ட நடைமுறைகளில் ஏஐ பயன்பாடு: சுப்ரீம் கோர்ட் கவலை

சட்ட நடைமுறைகளில் ஏஐ பயன்பாடு: சுப்ரீம் கோர்ட் கவலை

3


UPDATED : ஜூலை 04, 2026 08:10 PM

ADDED : ஜூலை 02, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : ஜூலை 04, 2026 08:10 PM ADDED : ஜூலை 02, 2026 02:50 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி முன்னுதாரணங்கள் மற்றும் வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் வங்கி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த என்சிஎல்டி, தனியார் நிறுவனத்தை சேர்ந்த பூஜா ரமேஷ் சிங் என்பவரை சஸ்பெண்ட் செய்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: ஏஐ மூலம் இல்லாத, கற்பனையான விஷயங்களை உருவாக்குவது அவற்றை சட்டத்தில் பயன்படுத்துவது என்பது சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகார வரம்பிற்குள் மெத்தில் ஐசோசயனைடை வெளியிடுவதைப் போன்றது. (மெத்தில் ஐசோசயனைடு (CH₃NC) என்பது எளிதில் ஆவியாகக்கூடிய, அதிக நச்சுத்தன்மை கொண்ட மற்றும் துர்நாற்றம் வீசும் ஒரு திரவம்)

யார் கண்ணுக்கும் புலப்படாத, நயவஞ்சகமான மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இதை, யாராவது கவனிக்கும் போது, நீதித்துறையின் மீது கறையை ஏற்படுத்துவதுடன், அதன் ஆன்மாவை பறித்துவிடும்.

தீர்ப்பாயம் தனது தீர்ப்புக்கு சான்றாக, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, இல்லாத, போலியான மற்றும் கற்பனையான ஆதாரங்களை ஒரு ஆதாரங்களாக சார்ந்திருந்த மற்றொரு வழக்கு இது.

தீர்ப்பு வழங்குவதற்கு உதவியாக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நமது உறுதிப்பாடும், அதேநேரத்தில் தீர்ப்பு வழங்கும் செயல்முறையின ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்களுக்கு முழுமையான ஆதிக்கம் இருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us