பீஹார் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் யார் யார் முன்னிலை?
பீஹார் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் யார் யார் முன்னிலை?
UPDATED : நவ 14, 2025 10:01 AM
ADDED : நவ 14, 2025 09:57 AM

புதுடில்லி: ரகோபூர் தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார்.
ரகோபூர் தொகுதி
ரகோபூர் தொகுதியில், மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி வேட்பாளர்) போட்டியிட்டார். இந்த தொகுதியில், தேஜ கூட்டணி சார்பில், சதீஷ் (பாஜ வேட்பாளர்) போட்டியிட்டார்.
தற்போது 9.30 மணி நிலவரப்படி, ஆர்ஜேடி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார்.
லக்கிசராய் தொகுதி
லக்கிசராய் தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில், பீஹார் மாநில பாஜ தலைவர் விஜய் குமார் சின்ஹா போட்டியிட்டார். இந்த தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், அமரேஷ் குமார் (காங்கிரஸ் வேட்பாளர்) போட்டியிட்டார்.
பாஜ வேட்பாளர் விஜய் குமார் முன்னிலை வகிக்கிறார்.
மஹூவா தொகுதி
மஹூவா தொகுதியில், தேஜ கூட்டணி சார்பில், சஞ்சய் குமார் (எல்ஜேபி வேட்பாளர்) போட்டியிட்டார். இந்த தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், முகேஷ் குமார் ரஷன் (ஆர்ஜேடி வேட்பாளர்) போட்டியிட்டார்.
இதே தொகுதியில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் (ஜேஜேடி வேட்பாளர்) தனித்து களம் இறங்கினார். இவர் இந்த தொகுதியில் சிறிது நேரம் முன்னிலையில் இருந்தார். இப்போது தேஜ கூட்டணி வேட்பாளர் சஞ்சய் குமார் முன்னிலையில் இருக்கிறார்.
டானாபூர் தொகுதி
டானாபூர் தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில், ராம் கிருபால் யாதவ் (பாஜ வேட்பாளர்)
போட்டியிட்டார். இந்த தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், ரிட் லால் ராய் (ஆர்ஜேடி வேட்பாளர்) களம் இறங்கினார்.
ஆர்ஜேடி வேட்பாளர் ரிட் லால் ராய் முன்னிலை வகிக்கிறார்.
மொகாமா தொகுதி
மொகாமா தொகுதியில், தேஜ கூட்டணி சார்பில், ஜேடியு தலைவர் அனந்த் குமார் சிங் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில் வீணா தேவி (ஆர்ஜேடி வேட்பாளர்) களம் இறங்கினார். இந்த தொகுதியில் ஜேடியு தலைவர் அனந்த் குமார் சிங் முன்னிலை வகிக்கிறார்.
பாங்கிபூர் தொகுதி
தாராபூர் தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில், நிதின் நபின் (பாஜ வேட்பாளர்)
போட்டியிட்டார். இந்த தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், ரேகா குமாரி (ஆர்ஜேடி வேட்பாளர்) களம் இறங்கினார்.
பாஜ வேட்பாளர் நிதின் நபின் முன்னிலை வகிக்கிறார்.
தாராபூர் தொகுதி
தாராபூர் தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில், பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி (பாஜ வேட்பாளர்) போட்டியிட்டார். இந்த தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், அருண் குமார் (ஆர்ஜேடி வேட்பாளர்) களம் இறங்கினார்.
பாஜ வேட்பாளர் பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிமுன்னிலை வகிக்கிறார்.
ரூபாலி தொகுதி
ரூபாலி தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில், கலாதர் பிரசாத் (ஜேடியு வேட்பாளர்)
போட்டியிட்டார். இந்த தொகுதியில் மஹாகட்பந்தன் கூட்டணி சார்பில், பீமா பாரதி (ஆர்ஜேடி வேட்பாளர்) களம் இறங்கினார்.
ஜேடியு வேட்பாளர் கலாதர் பிரசாத் முன்னிலை வகிக்கிறார்.

