மும்பையில் பெண் தொழிலதிபருக்கு பாலியல் துன்புறுத்தல் துப்பாக்கி முனையில் வீடியோ எடுத்ததாக புகார்
மும்பையில் பெண் தொழிலதிபருக்கு பாலியல் துன்புறுத்தல் துப்பாக்கி முனையில் வீடியோ எடுத்ததாக புகார்
ADDED : டிச 02, 2025 05:08 AM
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பெண் தொழிலதிபரை துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி அதை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக வைத்து, 'பிரான்கோ - இந்தியன் பார்மசூட்டிகல்ஸ்' என்ற மருந்து கம்பெனி இயங்கி வருகிறது. சென்னை பாடியில் இந்நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு செயல்படுகிறது.
இந்நிலையில், இந்த கம்பெனியின் நிறுவன உறுப்பினரும், நிர்வாக மேலாளருமான ஜாய் ஜான் பாஸ்கல் மீது, 51 வயது பெண் தொழிலதிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கூறப் பட்டுள்ளதாவது:
ஜாய் ஜானின் அழைப்பின் பேரில், அவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது துப்பாக்கி முனையில் நிறுத்தி என் ஆடைகளை களையும்படி மிரட்டினார்.
உயிருக்கு அஞ்சி அதற்கு பணிந்தபோது, என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தார். இதை வெளியே சொன்னால், நிர்வாண வீடியோ மற்றும் அந்தரங்க படங்களை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜாய் ஜான் மற்றும் ஐந்து பேர் மீது பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

