தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள்
தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள்
UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 12:26 PM
திருக்கோவிலூர்: தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு திருக்கோவிலூர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது.
தேசிய நூலக வாரவிழா வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு "ஆதலால் இந்நூலை எனக்கு பிடிக்கும்" என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. நூலக உறுப்பினர்களாக இருப்பவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை, மூங்கில்துறைப்பட்டு, தேவரடியார்குப்பம், விளந்தை, மணம்பூண்டி, பள்ளிச்சந்தல், குலதீபமங்கலம், காங்கியனூர், மேலந்தல் பகுதி நூலகங்களில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்கள் பற்றிய விவரம் நூலகங்களில் அறிவிக்கப்படும் என மணலூர்பேட்டை நூலகர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

