தடகளப் போட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி
தடகளப் போட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி
UPDATED : நவ 05, 2014 12:00 AM
ADDED : நவ 05, 2014 11:47 AM
கோவை: கோவையில் நடந்த தடகளப் போட்டியில், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.
கூட்டு குறுமைய தடகளப் போட்டிகள், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடத்தப்பட்டன. இதில், கோவை அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் சாதித்துள்ளனர்.
14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், குண்டு எறிதலில், அமிர்தவர்சினி முதலிடம், வட்டு எறிதலில், காவ்யா இரண்டாமிடம், 600 மீ., ஓட்டத்தில் சுகன்யா மூன்றாவது இடம், 4x100 தொடர் ஓட்டத்தில், மோனிஷா, அனு, சுகன்யா, தீபிகா அடங்கிய அணியினர் மூன்றாவது இடம் பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 100, 200 மீ., பிரிவில் ஷாலினி முதலிடம், 400 மீ., பிரிவில் கங்கா இரண்டாவது இடம், ஜெயவர்ஷினி மூன்றாவது இடம், 800 மீ.,ல் பிரியதர்ஷினி இரண்டாவது இடம், சந்தியா, குண்டு எறிதலில் இரண்டாவது இடம், வட்டு எறிதலில் மூன்றாவது இடம், குண்டு எறிதலில், உமா மகேஸ்வரி மூன்றாவது இடம், ஈட்டி எறிதலில் சாமிலி இரண்டாவது இடம், 4x100 மீ., தொடர் ஓட்டத்தில், ஷாலினி, கங்கா, வினோதினி, வைஷ்ணவி குழுவினர் முதலிடம் பெற்றனர்.
19 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 100 மீ., தடை தாண்டுதலில் மாலதி இரண்டாவது இடம், உயரம் தாண்டுதலில், லாவண்யா இரண்டாவது இடம், சரண்யா, 1500 மீ.,ல் இரண்டாவது இடம், 800 மீ.,ல் மூன்றாவது இடம், 4x100 மீ., தொடர் ஓட்டத்தில், மாலதி, லாவண்யா, கவிதா, வினுசியா குழுவினர் முதலிடம், 4x400 மீ., தொடர் ஓட்டத்தில், சரண்யா, சிந்துஜா, ரோஸ்னி, சானு குழுவினர் இரண்டாவது இடம்பெற்றனர்.

