ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
UPDATED : மே 21, 2026 04:06 PM
ADDED : மே 21, 2026 04:09 PM
பண்ருட்டி:
ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 100 சதவீத சாதனை படைத்தனர்.
பண்ருட்டி, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 263 மாணவ, மாணவியர்களும், தேர்ச்சி பெற்றனர்.
மாணவி சிவ ஸ்ருத்தி 493; மாணவி ஹாசனி 491; மாணவர் ஜெயவர்தன் 488; மதிப்பெண்கள் பெற்றனர். மாணவி தனுஷ்கா, மாணவர் தினேஷ், 485 மதிப்பெண்களும், மாணவர் தருண் 484 மதிப்பெண்களும் பெற்றனர்.
கணக்கு பாடத்தில் 3 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கில பாடத்தில், 6 மாணவர்கள், 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களில், 480 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 69 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஜான்டூயி கல்வி குழும தலைவர் வீரதாஸ் பாராட்டி பரிசு வழங்கினார் .
இதில் பள்ளி முதுநிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி , இணைச்செயலாளர் நிட்டின் ஜோஷ்வா, முதல்வர் மணிகண்டன், தலைமையாசிரியர் கனகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
