என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் :525 மாணவிகள் பங்கேற்பு
என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் :525 மாணவிகள் பங்கேற்பு
UPDATED : மே 10, 2026 07:42 PM
ADDED : மே 10, 2026 07:43 PM
ஊட்டி:
ஊட்டியில் அகில இந்திய என்.சி.சி., மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, கேரளா அந்தமான் லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள், 525 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சியின் நோக்கம், ஒழுக்கம், நன்னடத்தை, தைரியம், நாட்டுப்பற்று, கட்டுப்பாடு, கலாசாரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சிறந்த குடிமகனாக உருவாகுதல் ஆகியவையாகும்.
ஊட்டி அருகே அமைந்துள்ள எம். பாலாடா ஏகலைவா மாதிரி பழங்குடியினர் பள்ளியில் தங்கி, மலையற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாணவியர், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ரேடியோ வானிலை ஆய்வு மையம், பழங்குடியினர் ஆய்வு மையம், ரயில் நிலையம் மற்றும் எம்.ஆர். சி., ராணுவ மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிடுகின்றனர்.
மேலும், கேரட், ஸ்ட்ராபெரி விவசாய முறைகளை பார்வையிடவும் அழைத்து செல்லப்படுகின்றனர். நாள்தோறும், 12 கி.மீ., தூரம் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். மலையேற்ற பயிற்சியை தமிழ்நாடு என்.சி.சி., அமைப்பின் துணை இயக்குனர் கமோடர் சுதீப் நம்பியார், கோவை குரூப் கமாண்டர் கர்னல் ராமநாதன் பார்வையிட்டனர்.
பயிற்சி ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட கமாண்டர் கர்னல் சித்து, என்.சி.சி., முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர். வட மாநிலங்களை சேர்ந்த, இரண்டாவது குழுவினரின் முகாம், வரும் 16ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது.
