UPDATED : அக் 06, 2009 12:00 AM
ADDED : அக் 06, 2009 02:29 PM
அ நிறம் | அளவு
இந்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெண்கல்வி விகிதாசாரம் அதிகரிக்க இந்தியா முழுவதும் 1991 ல் அறிவொளி இயக்கம் இயக்கம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தில் கிராமப்புற பெண்களின் எழுத்தறிவை மேம்படுத்தும் வகையில் 14 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கிராமப்புறங்களில் பொறுப்பாளர்களை நியமித்து மாலை நேரத்தில் எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது.
இத்திட்டம்
1995 ல் தொடக்கல்வி திட்டமாக உயர்த்தப்பட்டு, 1998 ல் வளர்கல்வித்திட்டமாக மாற்றப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றது. இத்திட்டத்தில் மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர்கள், ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், டைப்பிஸ்ட் மற்றும் அலுவலக உதவியாளர்கள் முழு நேர பணியாகவும், தலைமை வளர்கல்வி பொறுப்பாளர்கள் மற்றும் உதவி மையப்பொறுப்பாளர்கள் பகுதி நேர பணி அடிப்படையிலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 28,000 பேர் பணிபுரிந்து வந்தனர்.இத்திட்டம் தற்போது தேசிய பெண்கள் எழுத்தறிவு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பெண் கல்வி விகிதாச்சாரம் ஐம்பது சதவீதத்திற்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே இனி, இத்திட்டம் தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில்
தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டுமே ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக பெண் கல்வி விகிதாச்சாரம் உள்ளது. விருதுநகரில் ஆண்கள் எழுத்தறிவு 84.56 சதவீதமும், பெண் கல்வி 64.04 சதவீதமும் உள்ளது. ஐம்பது சதவீதத்திற்கு மேல் உள்ள மாவட்டங்களில் வளர்கல்வி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு முறையான அறிவிப்பு ஏதுவும் வராத நிலையில் அக்டோபர் மாதத்திற்கு பிறகு இத்திட்டத்திற்கு வேறு செலவுகள் செய்யப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவதா இல்லை வேறு பணிக்கு செல்வதா என்பது குறித்து அரசு எந்த அறிவிப்பும் தெரிவிக்காத நிலையில் இவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது
குறித்து தலைமை வளர்கல்வி மையப்பொறுப்பாளர் குமார் தெரிவித்ததாவது:இத்திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் எங்களை பணியில் இருந்து நீக்கப்பட்டதாக எந்த அறிவிப்பு இல்லாத நிலையில் இந்த மாதத்திற்குரிய ஊதியம் கிடைக்குமா என தெரியவில்லை. எங்களை கல்விப்பணியில் காலியாக உள்ள இடங்களில் தற்போது வழங்கப்படும் ஊதிய அடிப்படையிலேயே நியமிக்கலாம் என்றார்.
